காட்பாடியில் சமூக இடைவெளி இல்லாமல் செயல்படும் ரேஷன் கடை

காட்பாடியில் சமூக இடைவெளி இல்லாமல் செயல்படும் ரேஷன் கடை                                      


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி பகுதியில் ரேஷன் கடை  செயல்பட்டு வருகிறது. மற்ற பகுதி ரேஷன் கடையில் ஒரு நாளைக்கு 100 காடாவது அத்தியாவசிய தேவையான அரிசி கோதுமை சர்க்கரை எண்ணெய் அரசாங்கத்தால் இலவசமாக கொடுக்கப்படும் அனைத்து பொருட்களும் கொடுக்கப்படுகிறது. ஆனால் காட்பாடியில் சித்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்களிடம் தகாத வார்த்தையில் பேசுவதும். மற்றும் எடை குறைவாக போடுவது. இருந்தும் பொதுமக்கள் பொருட்களை வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள் சுகாதாரமற்ற முறையிலும் சமூக இடைவெளி இல்லாத நிலைமையிலும் பொருட்களை முண்டியடித்து வாங்க பொதுமக்கள் முன்வருகிறார்கள். இதற்கு காட்பாடி அரசு அதிகாரிகள் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அரசு தரும் உணவு மற்றும் ரேஷன் கடை பொருள்களுக்கு நீண்ட வரிசையில் காத்திருப்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால் தமிழக அரசு மற்றும் காட்பாடி அரசு அதிகாரிகள் இதில் தலையிட்டு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்த பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.