" alt="" aria-hidden="true" />
பெரம்பூர்: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் அனைத்து மகளிர் புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, “எனது வீட்டின் அருகே இன்ஜினியரிங் படித்த சதீஷ் (25) என்பவரும் நானும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்தோம்.
என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகினார். தற்போது நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவருடன் அவரது தாய் சித்ரா, அவரது அண்ணன் பிரதாப் ஆகியோர் சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அனுராதா சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் போலீசார் தலைமறைவாக உள்ள சித்ரா, பிரதாப்பை தேடி வருகின்றனர்.